தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

கத்திரிக்கோல் பிறந்த கதை தெரியுமா? அறிவோம் அறிவியல்!

கி.மு. 1500 இல் கத்தரிக்கோல் எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் கத்தரிக்கோல் உயர்ந்த, அபூர்வ பொருளாக கருதப்பட்டது.  விலை உயர்ந்து காணப்பட்ட கத்தரிக்கோல் சாமானிய மக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. 1761 இல் இந்த போக்கு மாறி, பலரும் கத்தரிக்கோலை பயன்படுத்த ஆரம்பித்தனர். ராபர்ட் ஹிந்ச்ளிப் (Robert Hinchliffe) என்பவர் முதன் முதலில் தொழிற்சாலை அமைத்து கத்தரிக்கோலை தயாரிக்க ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்டைன்லெஸ் ஸ்டீலால், நீண்ட காலத்திற்கு பயன்பட கூடிய மழுங்காத கூறிய முனை கொண்ட கத்தரிக்கோல் தயாரிக்கப்பட்டன.

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!


சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மை தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாழும் நாங்களும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்த வகையில் இவர் தமிழ் மண்ணன் என்ற முடிவே எமக்கும் கிடைத்துள்ளன. இதனை பல்வேறு ஆங்கில இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மை தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாழும் நாங்களும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்த வகையில் இவர் தமிழ் மண்ணன் என்ற முடிவே எமக்கும் கிடைத்துள்ளன. இதனை பல்வேறு ஆங்கில இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


சந்திரனில் டைட்டானியம் அதிகளவில்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!


பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால், சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும்.

இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட, இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது. பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.

பீரங்கி மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது.
82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே,இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள்.

என்ன கல்யாணம் பன்னிகிரியா (திறமையாக பதில் சொல்லும் Iphone 4s)


ஆப்பிள் Iphone4s இந்த மொபைல் போன் நீங்கள் கேக்கும் அனைத்து கேள்விகளுக்கும் திறமையாக பதில் அளிக்கிறது...உங்களின் தந்தை யார் என்று கேட்டாள் அதற்கு திறமையாக நீங்கள்தான் என் தந்தை என்று பதில் தருகிறது.
நீங்கள் எந்த விதமான கேள்விகளை கேட்டாலும் அதற்கு சரியான பதிலை இந்த மொபைல் உங்களுக்கு தருகிறது..

அதிசய முக்கோணம்


பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்) என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ் நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன..


இந்த முக்கோணத்தில் எந்த ஒரு மனிதனோ அல்லது வாகனமோ சென்றால் அது மறந்து போகின்றது...அதற்கான காரணம் இதுவறை யாருக்கும் தெரியவில்லை.சிலர் அந்த கடற்பகுதியில் அமானுசுய சக்திகள் இருப்பதாக கூறுகின்றனர்..ஆனால் விஞ் ஞானிகள் அங்கு புவி ஈர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினால்தான் இது நிகழ்கிறது எங்கின்றனர்..ஆனால் இதுவரை சரியான உண்மை யாருக்கும் சரியாக தெரியவில்லை...


IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers