தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

உலக அதிசயங்கள்

 கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர்களான ஹீரோ மற்றும் ஆன்ட்டி பீட்டர் என்ற இருவரும் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைகால உலகின் ஏழு அதிசயங்களை தொகுத்து எழுதியுள்ளார்கள்.

            புராதான கால பொறியாளர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லாத அன்றைய உலகில் எவ்வித அறிவியல் உபகரணங்கள் இன்றி மனித சக்தி ஒன்றின் மூலமே அன்றாடம் புழக்கத்திலுள்ள எளிய சாதாரண உபகரணங்களின் துணையுடன் மரங்கள் கற்கள் உலோகங்கள் இவற்றைக் கொண்டு இந்த அதிசயங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதே இவற்றின் சிறப்பாகும்.

        இன்றைய அறிவியல் உலகில் சாதிக்க முடியாத இந்த சாதனைகள் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது 7 அதிசயங்களாக வரையறுத்துள்ளனர் காலப்போக்கில் வரலாற்றாய்வாளர்கள் உலக அதிசயங்களை இணைத்து  அவற்றை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர். 

            அதே சமயம் கடந்த 2007 ஆம் ஆண்டு வாக்கில் swiss சேர்ந்த நியூ ஓப்பன் ஓல்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உலகின் அதிசயங்கள் கருதப்படும் மொத்தம் 200 அதிசயங்களை பற்றிய குறிப்புகளை உலக மக்களிடம் எடுத்துக்கூறி பொதுமக்களின் ஓட்டெடுப்பு மூலம் முதல் ஏழு அதிசயங்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.

        இந்த இருநூறு அதிசயங்களுள் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் போட்டியில் கலந்து கொண்டது.

அதுமட்டுமில்லாமல் சுருக்கப்பட்ட கடைசி பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபத்தொரு அதிசயங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது .

0 comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers